சுவிஸ்: 7°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் கைது: குற்றப்புலனாய்வுத் துறை நடவடிக்கை

VIGNESWARAN ABIRAMY•18 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் கைது: குற்றப்புலனாய்வுத் துறை நடவடிக்கை

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் கைது: குற்றப்புலனாய்வுத் துறை நடவடிக்கை குறித்த பிரத்யேக ஒளிப்படம்

போலி ஆவணங்களைத் தயாரித்து சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டுகளை விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அதிகாரி, இடைத்தரகர்களுடன் இணைந்து பெருந்தொகை பணத்தைப் பெற்றுக்கொண்டு போலித் தகவல்களின் அடிப்படையில் பலருக்கு கடவுச்சீட்டுகளை அச்சிட்டு வழங்கியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய அதிகாரிகளிடமும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

வெளிநாட்டு வேலை மோசடி: தலைமறைவான பெண் பிடிபட்டார்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டு, நீதிமன்றத்திற்குச் சமூகமளிக்காமல் தலைமறைவாகியிருந்த பெண் ஒருவர், 12 பிடியாணைகளின் அடிப்படையில் ராகமப் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ரூ. 3 பில்லியன் போதைப்பொருள் மீட்பு: 5 பேர் கைது!

தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில், 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான 150 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் மீன்பிடிப் படகொன்றும், 5 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

1.7 லட்சம் விவசாயிகளுக்கு ஓய்வூதியம்: 3,975 தபாலகங்கள் மூலம் விநியோகம்!

நாடளாவிய ரீதியில் 1 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு, 3 ஆயிரத்து 975 தபாலகங்கள் ஊடாக மாதாந்தம் 415 மில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகை ஓய்வூதியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கை போக்குவரத்து சபையின் 2,000க்கும் அதிகமான பஸ்கள் முடக்கம்: பிரதி அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி புள்ளிவிபரம்!

இலங்கை போக்குவரத்துச் சபையில் 7 ஆயிரத்து 130 பேருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவற்றில் 5 ஆயிரம் பேருந்துகள் மட்டுமே இயங்கும் நிலையில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm