
டெல்லி பாஜக அலுவலகத்திற்கு JVP தூதுக்குழு விஜயம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கையின் ஆளும் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் இன்று (30) டெல்லி பாஜக அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
அவர்களை டெல்லி பாஜக தலைவர் ஹர்ஷ் மல்ஹோத்ரா வரவேற்றார்.
பாரதிய ஜனதா கட்சியின் அழைப்பின் பேரில், செப்டம்பர் 27 முதல் ஒக்டோபர் 1 வரை JVP தூதுக்குழுவினர் மேற்கொண்டு வரும் இந்தியப் பயணத்தின் ஒரு பகுதியாகவே இந்தப் பயணம் அமைந்திருந்தது என்று பாஜகவின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
ஐந்து பேர் கொண்ட இக்குழுவில், பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, மத்திய குழு உறுப்பினர் சந்திரிகா அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர் அபுபக்கர் அதம்பாவா, மாவட்டக் குழு உறுப்பினர் கபிலன் சுந்தரமூர்த்தி மற்றும் சர்வதேச விவகாரப் பிரிவு உறுப்பினர் கல்பனா மதுபாஷினி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
உலகிலேயே சிகரெட் விலை மிக அதிகம் உள்ள நாடு இலங்கை! - ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் ஆய்வில் அதிர்ச்சி!
மக்களின் கொள்வனவு திறன் சமநிலை அடிப்படையில் கணக்கிடும்போது, உலகிலேயே மிக அதிக விலையுயர்ந்த சிகரெட்டுகள் இலங்கையிலேயே விற்பனை செய்யப்படுவதாக ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் புதிய மதிப்பீட்டு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
பல்லேகலை தும்பர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு: தப்பிச் செல்ல முயன்ற கைதி பலி!
கண்டி - கலகெதர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
நிதி அமைச்சின் அதிரடி நடவடிக்கை: 33 அரசு நிறுவனங்களைக் கலைக்கும் பணிகள் ஆரம்பம்!
தேர்ந்தெடுக்கப்பட்ட 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைக் கலைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது!
கட்டுநாயக்கவில் பரபரப்பு: புகைமூட்டம் காரணமாக ஸ்ரீலங்கன் விமானம் அவசரத் தரையிறக்கம்!
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் திடீரெனப் புகைமூட்டம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்று இரவு அந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




