சுவிஸ்: 5°C
•
இலங்கை: 28°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

அனோஜனுக்கு கருணை காட்டுமாறு சவூதி அதிகாரிகளிடம் கோரிக்கை

அக்கினி•19 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
அனோஜனுக்கு கருணை காட்டுமாறு சவூதி அதிகாரிகளிடம் கோரிக்கை

அனோஜனுக்கு கருணை காட்டுமாறு சவூதி அதிகாரிகளிடம் கோரிக்கை குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜை அனோஜன் சிவராசாவுக்கு கருணை காட்டுமாறு, முன்னாள் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சவூதி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஆட்சேபனைக்குரிய கருத்து தொடர்பாக அனோஜனுக்கு முதலில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும், பின்னர் அந்தத் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மரண தண்டனை குறித்த தகவலை இலங்கை வெளிவிவகார அமைச்சு இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

குறித்த சமூக ஊடகப் பதிவை சில நிமிடங்களிலேயே நீக்கி, பகிரங்கமாக மன்னிப்புக் கோரியதாக தெரிவிக்கப்படும் நிலையில், அனோஜனுக்கு தனது தவறை உணர்ந்து வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மேலும், அனோஜனுக்கு உரிய சட்ட உதவிகளை வழங்குவதுடன், இலங்கை அரசாங்கம் உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், நீதியுடன் கருணையும் இணைந்திருக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
அக்கினி

அக்கினி

ஆசிரியர் குழு

அக்கினி செய்திகள் ஆசிரியர் குழு

தொடர்புடைய செய்திகள் (Related News)

வெளிநாட்டு வேலை மோசடி: தலைமறைவான பெண் பிடிபட்டார்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டு, நீதிமன்றத்திற்குச் சமூகமளிக்காமல் தலைமறைவாகியிருந்த பெண் ஒருவர், 12 பிடியாணைகளின் அடிப்படையில் ராகமப் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ரூ. 3 பில்லியன் போதைப்பொருள் மீட்பு: 5 பேர் கைது!

தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில், 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான 150 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் மீன்பிடிப் படகொன்றும், 5 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

1.7 லட்சம் விவசாயிகளுக்கு ஓய்வூதியம்: 3,975 தபாலகங்கள் மூலம் விநியோகம்!

நாடளாவிய ரீதியில் 1 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு, 3 ஆயிரத்து 975 தபாலகங்கள் ஊடாக மாதாந்தம் 415 மில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகை ஓய்வூதியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கை போக்குவரத்து சபையின் 2,000க்கும் அதிகமான பஸ்கள் முடக்கம்: பிரதி அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி புள்ளிவிபரம்!

இலங்கை போக்குவரத்துச் சபையில் 7 ஆயிரத்து 130 பேருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவற்றில் 5 ஆயிரம் பேருந்துகள் மட்டுமே இயங்கும் நிலையில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm