சுவிஸ்: 8°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

கட்டுமானத் துறைக்கு புத்துயிர்: நாட்டின் பொருளாதாரத்திற்கு ஜனாதிபதி புது இலக்கு!

VIGNESWARAN ABIRAMY•1 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
கட்டுமானத் துறைக்கு புத்துயிர்: நாட்டின் பொருளாதாரத்திற்கு ஜனாதிபதி புது இலக்கு!

கட்டுமானத் துறைக்கு புத்துயிர்: நாட்டின் பொருளாதாரத்திற்கு ஜனாதிபதி புது இலக்கு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் வகையில், பின்னடைவைச் சந்தித்துள்ள கட்டுமானத் துறையை மீண்டும் வலுப்படுத்துவதும் புதுப்பிப்பதும் அத்தியாவசியமானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கட்டுமானத் துறைப் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் இடம்பெற்ற உயர்மட்டக் கலந்தரையாடலின் போதே ஜனாதிபதி இதனைச் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் நிலவிய பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாட்டின் கட்டுமானத் துறை பெரும் சவால்களை எதிர்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், புதிய வேலைத்திட்டங்கள் மற்றும் முதலீடுகள் மூலம் இத்துறையை மீண்டெழச் செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

கட்டுமானத் துறையின் வளர்ச்சி நாட்டின் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதுடன், மூலதன உருவாக்கத்திற்கும் நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் நேரடிப் பங்காற்றும் என்பதால், இத்துறைக்குத் தேவையான உதவிகளை வழங்க அரசு முன்னுரிமை அளிக்கும் என்றும் ஜனாதிபதி மேலும் உறுதிபடக் கூறினார்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

உலகிலேயே சிகரெட் விலை மிக அதிகம் உள்ள நாடு இலங்கை! - ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் ஆய்வில் அதிர்ச்சி!

மக்களின் கொள்வனவு திறன் சமநிலை அடிப்படையில் கணக்கிடும்போது, உலகிலேயே மிக அதிக விலையுயர்ந்த சிகரெட்டுகள் இலங்கையிலேயே விற்பனை செய்யப்படுவதாக ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் புதிய மதிப்பீட்டு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பல்லேகலை தும்பர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு: தப்பிச் செல்ல முயன்ற கைதி பலி!

கண்டி - கலகெதர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நிதி அமைச்சின் அதிரடி நடவடிக்கை: 33 அரசு நிறுவனங்களைக் கலைக்கும் பணிகள் ஆரம்பம்!

தேர்ந்தெடுக்கப்பட்ட 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைக் கலைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது!

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கட்டுநாயக்கவில் பரபரப்பு: புகைமூட்டம் காரணமாக ஸ்ரீலங்கன் விமானம் அவசரத் தரையிறக்கம்!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் திடீரெனப் புகைமூட்டம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்று இரவு அந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm