சுவிஸ்: 7°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

இன்றைய வானிலை அறிக்கை: பல மாவட்டங்களில் 50 மி.மீ வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

VIGNESWARAN ABIRAMY•18 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இன்றைய வானிலை அறிக்கை: பல மாவட்டங்களில் 50 மி.மீ வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

இன்றைய வானிலை அறிக்கை: பல மாவட்டங்களில் 50 மி.மீ வரை பலத்த மழைக்கு வாய்ப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

நாட்டின் சில மாவட்டங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது. இது தொடர்பாக இன்று (18) அதிகாலை திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலதிக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது.வடமேல் மாகாணத்தில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள், முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்ற வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதனாலுண்டாகும் ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

வெளிநாட்டு வேலை மோசடி: தலைமறைவான பெண் பிடிபட்டார்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டு, நீதிமன்றத்திற்குச் சமூகமளிக்காமல் தலைமறைவாகியிருந்த பெண் ஒருவர், 12 பிடியாணைகளின் அடிப்படையில் ராகமப் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ரூ. 3 பில்லியன் போதைப்பொருள் மீட்பு: 5 பேர் கைது!

தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில், 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான 150 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் மீன்பிடிப் படகொன்றும், 5 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

1.7 லட்சம் விவசாயிகளுக்கு ஓய்வூதியம்: 3,975 தபாலகங்கள் மூலம் விநியோகம்!

நாடளாவிய ரீதியில் 1 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு, 3 ஆயிரத்து 975 தபாலகங்கள் ஊடாக மாதாந்தம் 415 மில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகை ஓய்வூதியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கை போக்குவரத்து சபையின் 2,000க்கும் அதிகமான பஸ்கள் முடக்கம்: பிரதி அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி புள்ளிவிபரம்!

இலங்கை போக்குவரத்துச் சபையில் 7 ஆயிரத்து 130 பேருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவற்றில் 5 ஆயிரம் பேருந்துகள் மட்டுமே இயங்கும் நிலையில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm