பிரான்ஸ் எல்லைப் பகுதியில் கடைகள் சூறை – வன்முறைக்கு எதிராக மக்கள் திரண்டனர்!
பிரான்ஸின் ஹாட்-சவோய் பகுதியில், சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில், அன்னமாஸ் நகரில் 11 கடைகள் சூறையாடப்பட்டன. இதற்குப் பதிலளிக்கும் வகையில், இன்று பல்வேறு நகரங்களில் மேயர்கள் தலைமையில் பொதுமக்கள் ஒன்றுகூடி வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.












